செய்திகள் :

தேர்வு பயம்: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்!

post image

தில்லி ரோகினி பகுதியில் கடந்த வாரம் இ-மெயிலில் இரு பள்ளிகளுக்கு வெடுகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் அந்தப் பள்ளியின் மாணவர்களே என தில்லி காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

தில்லி சிறப்பு காவல்படையினர் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து விசாரணை செய்தபோது, அவை அந்தந்த பள்ளிகளில் படிக்கும் இரு மாணவர்களால் விடுக்கப்பட்டதாகத் தெரியவந்தது. இரு மாணவர்களும் பள்ளித் தேர்வுக்கு படிக்காததால் தேர்வை ஒத்தி வைப்பதற்காக இவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளனர். இருவரும் பதின்வயது மாணவர்கள் என்பதால் அறிவுரை வழங்கி அனுப்பியதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.


கடந்த டிச. 14 அன்று இதேபோன்று ஒரு தனியார் பள்ளி மாணவன் பள்ளிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அவரது வீட்டிற்குச் சென்று காவல்துறையினர் எச்சரித்தனர். மேலும், அந்த மாணவனின் பெற்றோரிடம் அவரது நடவடிக்கை குறித்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தினர்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... அதானியில் தொடங்கி அம்பேத்கர் வரை!


டிச. 13 மற்றும் 17 தேதிகளில் தில்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. டிச. 13 அன்று மட்டுமே 30 பள்ளிகளுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வந்தன. இதுபோன்ற சம்பவங்கள் தில்லியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுடன் பேசிய தில்லி முன்னாள் முதல்வர் கேஜரிவால் தேசிய தலைநகரில் பள்ளிகளுக்க்கு தொடர்ச்சியான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்தார்.

இதுபோன்ற அச்சுறுத்தல்களால் குழந்தைகளின் மனதில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கல்வி மீது ஏற்படக்கூடிய தாக்கம் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், இவ்வாறு தொடர்ந்து நடந்தால் அவர்கள் படிப்பும் மனநலனும் பாதிக்கும் என்று கூறினார்.

இதையும் படிக்க | கேரளத்துக்கே திருப்பி அனுப்பப்படும் மருத்துவக் கழிவுகள்!


கடந்த நவம்பர் 19 அன்று, வெடிகுண்டு மிரட்டல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அவசர நிலை பிரச்னைகளை சமாளிக்க விரிவான செயல் திட்டத்தை உருவாக்க அரசு மற்றும் காவல்துறைக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கு காலக்கெடுவாக 8 வாரங்களை நீதிமன்றம் நிர்ணயித்தது.

நாளை தில்லியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: முதல் முறையாக பங்கேற்கும் மோடி

புதுதில்லி: தில்லியில் திங்கள்கிழமை(டிச.23) நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் திங்கள்கிழமை இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட... மேலும் பார்க்க

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தியின் வெற்றியை எதிர்த்து பாஜக வழக்கு!

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சாா்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரியங்கா காந்தியும் பாஜக சாா்பில் நவ்யா ஹரிதாஸும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சத்யன் மொகேரி மாநில... மேலும் பார்க்க

பந்தயம் வைத்து நாய்ச் சண்டை: 81 பேர் கைது!

ராஜஸ்தானில் பந்தயம் வைத்து நாய்ச் சண்டை நடத்திய 81 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தானில் உள்ள ஹனுமன்கர் மாவட்டத்தில் கடந்த வெள்ளியன்று (டிச. 20) இரவு நாய்ச் சண்டை பந்தயம் நடத்தப்பட்டது. இந்தப் பந்தயம்... மேலும் பார்க்க

சொத்து தகராறு: தம்பி மீது டிராக்டர் ஏற்றிக் கொலை!

கர்நாடகத்தில் சொத்து தகராறால் தம்பியைக் கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.கர்நாடகத்தின் பெலாகவி மாவட்டத்தில் மாருதி பவிஹால் (30) என்பவருக்கும், அவரது தம்பியான கோபாலுக்கும் இடையில் சொத்து தொடர்பான ... மேலும் பார்க்க

புஷ்பா 2 திரைப்படத்தால் பிடிபட்ட கடத்தல்காரர்!

மகாராஷ்டிரத்தில் பல மாதங்களாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை புஷ்பா 2 திரைப்பட திரையரங்கில் காவல்துறையினர் கைது செய்தனர். மகாராஷ்டிரத்தில் விஷால் மெஷ்ரம் என்பவர் மீது 2 கொலை, போதைப்பொருள் கடத்தல்... மேலும் பார்க்க

இந்தியாவின் திறன்மிகு பணியாளா்களுக்கு உலகெங்கிலும் வாய்ப்பு: பிரதமா் மோடி

இந்தியாவின் திறன்மிகு பணியாளா்களுக்கு உலகின் பல்வேறு நாடுகள் வாயில் கதவை திறந்துள்ளன. அந்த நாடுகளில் இந்திய பணியாளா்களின் நலனை உறுதி செய்யும் ஒப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று பிரதமா்... மேலும் பார்க்க