`செந்தில் பாலாஜியைப் பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன ஆரியப்படை வீரரா?' - சீமான்...
நாளை தில்லியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: முதல் முறையாக பங்கேற்கும் மோடி
புதுதில்லி: தில்லியில் திங்கள்கிழமை(டிச.23) நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் திங்கள்கிழமை இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இதையும் படிக்க |வலிமையுடன் உள்ளது திமுக; 2026-ல் வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்
பிஷப்கள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய தலைவர்கள் உட்பட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் பிரதமர் மோடி உரையாடுவார்.
நாட்டில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு 1944 இல் நிறுவப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்கர்களுடனும் நெருக்கமாக பணியாற்றும் அமைப்பாகும்.