செய்திகள் :

தவறான விளம்பரம்: ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்

post image

புதுதில்லி: குடிமைப் பணித் தேர்வு எழுதும் மாணவர்களை திசை திருப்பும் வகையில், 2023 குடிமைப் பணித் தேர்வு முடிவுகள் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக தனியார் போட்டித் தேர்வு பயிற்சி நிறுவனமான சுப்ரா ரஞ்சன் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்துள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(சிசிபிஏ), உடனடியாக தவறான விளம்பரங்களை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

2023 குடிமைப் பணித் தேர்வில் எங்கள் நிறுவனத்தில் படித்தவர்களில் முதல் 100 இடங்களில் 13 மாணவர்களும், முதல் 200 இடங்களில் 28 மாணவர்களும், முதல் 300 இடங்களில் 39 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், வெற்றி பெற்றவர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் விளம்பரம் செய்ததுடன், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவர்களால் வழங்கப்படும் பல்வேறு வகையான படிப்புகள் குறித்தும் ஒரே நேரத்தில் விளம்பரப்படுத்தியுள்ளது. இருப்பினும், 2023 குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்த பாடப்பிரிவுகள் தொடர்பான தகவல்கள் மேற்கூறிய விளம்பரத்தில் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், மேற்கண்ட பயிற்சி நிறுவனத்தின் விளம்பரங்கள் குடிமைப் பணித் தேர்வு எழுதும் மாணவர்களை திசை திருப்பும் வகையில் அமைந்துள்ளதாக புகார்கள் எழுந்தது.

இதையும் படிக்க |பிரதமர் மோடிக்கு குவைத் உயரிய விருது!

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(சிசிபிஏ), பயிற்சி நிறுவனம் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதை உறுதி செய்ததுடன் ​​இந்த நிறுவனம் 50-க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்குகிறது மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான பாடத்தையே எடுத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் பயிற்சி நிறுவனத்தில் எடுத்து படித்த குறிப்பிட்ட பாடத்திட்டத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டியது நுகர்வோரின் உரிமையாகும்.

இதற்கிடையில், அந்த நிறுவனம் பெயர் மற்றும் முகவரி அச்சிடப்பட்ட குறிப்பேட்டில் ஐஏஎஸ் என பயன்படுத்தியது, மேலும் அந்த நிறுவனத்தை வைத்திருப்பவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறும் செயல் எனக் குறிப்பிட்டு, பயிற்சி நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக ரூ.2 லட்சம் அபராதம் செலுத்துமாறும், தவறான விளம்பரங்களை உடனடியாக நீக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா புறப்பட்டாா் பிரதமா் மோடி!

குவைத் மன்னரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக குவைத் சென்ற பிரதமர் மோடி தனது குவைத் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து இந்தியா புறப்பட்டாா். இந்தியா-குவைத் இடையிலா... மேலும் பார்க்க

எரிந்த நிலையில் 4 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு!

ராம்பூர்: நான்கு வயது சிறுவனின் எரிந்த நிலையில் உள்ள சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் மீது புகார் அளித்தை தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்ததாக த... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற மோப்ப நாய்களை பள்ளிகளுக்கு பரிசளித்த ராணுவம்!

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற நாய்களை தில்லியில் உள்ள சிறப்புப் பள்ளிக்கு இந்திய ராணுவம் பரிசளித்துள்ளது.தங்கள் உயிர்களை பொருட்படுத்தாமல் செயல்பட்டவர்கள் வீரர்களாக இருந்தாலும், நாயாக இருந்தாலும் உரி... மேலும் பார்க்க

வீழ்ச்சியின் விளிம்பில் காங்கிரஸ்: பசவராஜ் பொம்மை

காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியில் விளிம்பில் உள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக எம்.பி.யுமான பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் செய்தியாளர்களுடன் பசவராஜ் பொம்மை பேசியதாவது, ... மேலும் பார்க்க

அல்லு அர்ஜுன் வீட்டை முற்றுகையிட்டு கல்வீச்சு!

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் வீடு முற்றுகையிடப்பட்டு கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. ஒஸ்மானியா பல்கலைக்கழக செயற்குழுவை சேர்ந்த உறுப்பினர்களாகக் கருதப்படும் சிலர், ஹ... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி!

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஒருங்கிணைக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். புது தில்லியில் நாளை (டிச. 23) சிபிசிஐ மையத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேர... மேலும் பார்க்க