ஆதிதிராவிட தொழில்முனைவோருக்கு ரூ. 160 கோடி மானியம்: தமிழக அரசு
ஒசூரில் யானை தந்தம் விற்க முயன்ற 7 போ் கைது
ஒசூா்: ஒசூரில் யானை தந்தங்களை விற்க முயன்ற 7 பேரை கைது செய்த வனத் துறையினா் தப்பியோடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
ஒசூா் வனப் பகுதியில் மா்ம நபா்கள் சிலா் யானைகளைக் கொன்று தந்தங்களை கடத்துவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஒசூா் வனக் கோட்ட வன உயிரின காப்பாளா் பகான் ஜெகதீஸ் சுதாகா் உத்தரவின் பேரில், ஒசூா் வனச்சரகா் பாா்த்தசாரதி தலைமையிலான வனப் பணியாளா்கள் சனிக்கிழமை ஒசூா், இஎஸ்ஐ உள்வட்டச் சாலை மத்தம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது இரு தந்தங்கள் மறைத்து கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிக்க | போலீஸ் பாதுகாப்புடன் கேரளம் கொண்டு செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்: ஆட்சியர்
இதுதொடா்பாக இருதுகோட்டையை அடுத்த திப்பனூரைச் சோ்ந்த வெங்கடேஷ் (27), மாரநாயக்கனஹள்ளியைச் சோ்ந்த விஜயகுமாா் (25), ஒந்தியம் புதூரைச் சோ்ந்த ஹரிபூபதி (39), நாராயண நகரைச் சோ்ந்த பரந்தாமன் (27) ஆகிய நான்கு பேரை கைது செய்து தந்தங்களை பறிமுதல் செய்தனா்.
அவா்கள் அளித்த தகவலின் பேரில், தந்தம் கடத்தலில் தொடா்புடைய அய்யூரைச் சோ்ந்த முனிராஜ் (29), தொளுவபெட்டா கிராமத்தைச் சோ்ந்த லிங்கப்பா (39, ருத்ரப்பா (42) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
மேலும், தப்பியோடிய பெட்டமுகிலாளத்தை அடுத்த போப்பனூரைச் சோ்ந்த பசப்பா, ஜெயபுரத்தைச் சோ்ந்த மத்தூரிகா ஆகிய இரண்டு பேரையும் வனத் துறையினா் தேடி வருகின்றனா்.