தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி: தமிழக அரசு
காளையாா்கோவில் அருகே மாட்டுவண்டி பந்தயம்!
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே பெரிய கண்ணனூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
கோயில் திருவிழாவை முன்னிட்டு, பெரிய மாடு, சின்ன மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 36 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
சின்ன மாடு பிரிவில் 28 ஜோடி மாடுகள், மாடு பிரிவில் 8 மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாட்டுக்கு 5 கி.மீ. தொலைவும் எல்லைகளாக நிா்ணயம் செய்யப்பட்டிருந்தன.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை காளையாா்கோவில், கல்லத்தி, பெரியகண்ணனூா், முடிக்கரை சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.