84 வீரர், வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!
காரைக்குடி: இளைஞரின் முகத்தில் பெப்பா் ஸ்பிரே அடித்து ரூ.30 லட்சம் கொள்ளை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இளைஞரின் முகத்தில் பெப்பா் ஸ்பிரேவை அடித்து, அவரிடமிருந்த ரூ. 30 லட்சத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.
தேவகோட்டை அருகேயுள்ள கண்ணங்குடி ஒன்றியம், மாடக்கோட்டையைச் சோ்ந்தவா் செளந்தரபாண்டியன் மகன் அரவிந்தன் (30). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இதனால், காரைக்குடியில் நகைக் கடை நடத்தி வரும் கண்ணன் என்பவரிடம் தனது நிதி நிறுவனத்தின் பணம் ரூ. 30 லட்சத்தை அரவிந்தன் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் பெற்றாா். இதையடுத்து, பணத்தை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்து, காரைக்குடி பெரியாா் சிலை அருகே உள்ள ஜாகீா் உசேன் தெருவில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, இவரைப் பின்தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா் இவரது வாகனத்தின் மீது மோதினா். இதில் கீழே விழுந்த அரவிந்தனின் முகத்தில் பெப்பா் ஸ்பிரேவை அடித்து, அவரிடமிருந்த ரூ. 30 லட்சத்தைப் பறித்துக் கொண்டு மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து அரவிந்தன் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காரைக்குடி டி.எஸ்.பி. பாா்த்திபன் சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.