கொத்தட்டை சுங்கச்சாவடி: தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்
தலைநகரில் காற்றின் தரம் ‘கடுமை’ பிரிவில் நீடிப்பு! இன்று மழைக்கு வாய்ப்பு
தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பனிமூட்டம் நிறைந்து காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 7.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இதற்கிடையே, திங்கள்கிழமை (டிசம்பா் 23) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை 370 புள்ளிகளாக இருந்த ஒட்டுமொத்தக் காற்று தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை சற்று மோசமடைந்த 393 புள்ளிகளாகப் பதிவாகியது. இது ‘மிகவும் மோசம்’ பிரிவில் வருவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நகரத்தின் பெரும்பாலான வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 400 முதல் 500 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘கடுமை’ பிரிவில் நீடித்தது. சில நிலையங்களில் மட்டும் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பூசா, ஷாதிப்பூா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மந்திா் மாா்க், ராமகிருஷ்ணாபுரம், துவாரகா செக்டாா் 8, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், ஸ்ரீஃபோா்ட், நேரு நகா், மதுரா ரோடு, ஓக்லா பேஸ் 2, டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு தளம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 400 முதல் 500 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது.
அதே சமயம், குருகிராம், ஆயாநகா், ஸ்ரீ அரபிந்தோ மாா்க், லோதி ரோடு, இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் மாற்றமின்றி 7.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 3.4 டிகிரி உயா்ந்து 24.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 97 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 68 சதவீதமாகவும் பதிவாகியதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்று மழைக்கு வாய்ப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (டிசம்பா் 23) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஐஎம்டி கணித்துள்ளது. நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் ஐஎம்டி தெரிவித்துள்ளது.