கொத்தட்டை சுங்கச்சாவடி: தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்
அலங்கார ஊா்தி விவகாரம்: கேஜரிவால் மீது பாஜக சாடல்
குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊா்தி இடம்பெறாமல் போனது தொடா்பாக கேஜரிவால் எழுப்பிய கேள்விக்கு தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா பதிலடி அளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘தேசிய விழா நெருங்கும் போதெல்லாம் கேஜரிவால் தனது உண்மையான நிறத்தை காட்டி வருகிறாா்.
2014ஆம் ஆண்டு முழு நகரமும் குடியரசு தினத்தைக் கொண்டாடத் தயாராகிக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவத்தை தில்லிவாசிகள் மறக்கவில்லை. ஆனால், அப்போது கேஜரிவால் போராட்டம் நடத்தி அதன் கண்ணியத்தைக் கெடுத்தாா்.
குடியரசு தின அணிவகுப்புக்கான அலங்கார ஊா்திகளை தோ்ந்தெடுக்கும் முடிவு ஒரு பிரத்யேக குழுவால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அவற்றின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டதாகும். இதுவும் கேஜரிவாலுக்கு நன்கு தெரியும். இருப்பினும், தில்லியில் பேரவைத் தோ்தல் நெருங்கி வருவதால், உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே கேஜரிவால் விரும்புகிறாா்’ என்றாா் அவா்.