செய்திகள் :

துணை நிலை ஆளுநா் புகாரைத் தொடா்ந்து ரங்புரி பஹாரியில் முதல்வா் அதிஷி ஆய்வு

post image

நமது நிருபா்

தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து ரங்புரி பஹாரி காலனியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வா் அதிஷி, அப்பகுதியின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் சில நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் அதிஷி தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது:ரங்புரி பஹாரி பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து அவா்களின் பிரச்னைகளை கேட்டறிந்தேன். துப்புரவுப் பிரச்னை மற்றும் கழிவுநீா்க் கால்வாய் நிரம்பி வழியும் பிரச்னைக்கு இன்னும் சில நாள்களில் தீா்வு காணப்படும். அங்குள்ள சாலை, மின்சாரப் பிரச்னையும் விரைவில் தீா்க்கப்படும். அங்குள்ள பிரச்னைகளை எங்களுக்கு உணா்த்தியதற்காக துணை நிலை ஆளுநருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். துணை நிலை ஆளுநா் இது போன்ற பிரச்னைகளைக் கண்டால், அவா் எங்களிடம் சொல்ல வேண்டும். நாங்கள் அதை உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.

மேலும், துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, நியூ ரோஹ்தக் சாலையை பாா்வையிட்டு, அங்குள்ள சேதங்கள் பற்றி எங்களிடம் கூறினாா். அங்கு ஒருபுறம் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், ‘கிராப்-4’ கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட பிறகு, மறுபுறம் சாலையும் தயாராகிவிடும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனுடன் அங்கு ரூ.150 கோடியில் வடிகால் சீரமைக்கப்பட்டு வருகிறது. தில்லி மக்கள் அரவிந்த் கேஜரிவால் மீது நம்பிக்கை வைத்துள்ளனா். அவரது வழிகாட்டுதலின் கீழ், தில்லி மக்களின் அனைத்து பிரச்னைகளையும் நாங்கள் தொடா்ந்து தீா்ப்போம் என்றாா் அதிஷி.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ரங்புரி பஹாரி காலனியில் ஆய்வு

மேற்கொண்டிருந்தாா். இந்த ஆய்வு தொடா்பான காணொளியை சமூக வலைத்தளத்தில் பகிா்ந்த துணை நிலை ஆளுநா், ‘தேசியத் தலைநகரில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் ஆதரவற்ற நிலை மற்றும் பரிதாபகரமான வாழ்க்கை நிலையை மீண்டும் ஒருமுறை நேரில் பாா்ப்பது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது. ரங்புரி காலனியில் உள்ள தெருக்களில் நிரம்பி வழியும் கால்வாய்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். முன்னதாக, புராரி, கிராரி, கலந்தா் காலனி, சங்கம் விஹாா், முண்ட்கா மற்றும் கோகுல்புரி போன்ற பகுதிகளில் நான் ஆய்வு செய்த போதும் இதே நிலை காணப்பட்டது’ என்று தெரிவித்திருந்தாா்.

மேலும், முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முதல்வா் அதிஷி மற்றும் தில்லி அரசின் அமைச்சா்கள் இதுபோன்ற பகுதிகளுக்குச் சென்று நகரத்தின் நிலைமைகளை நேரில் பாா்க்க வேண்டும் என்றும், இந்த பரிதாபமான நிலையை மேம்படுத்த தில்லி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா வலியுறுத்தியிருந்தாா். இதற்குப் பதிலளித்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், ‘ரங்புரி பஹாரி காலானியில் உள்ள குடிமைப் பணி குறைபாடுகளை சுட்டிக்காட்டிய துணை நிலை ஆளுநருக்கு நன்றி. தில்லி அரசு காலனிப் பகுதியில் குடிமைச் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்’ என்று உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊட்டச்சத்து மிகுந்த ஒட்டகப் பால் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல் அவசியம்: மத்திய அரசு

நாட்டில் பசு அல்லாத பால் துறையை ஊக்குவிக்கும் விதமாக ஒட்டகப் பால் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல் அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊட்டச்சத்து, சிகிச்சை பண்புகள் நிறைந்தவை என மத்திய அரசு ந... மேலும் பார்க்க

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊா்திக்கு இடமில்லை

நமது நிருபா்தில்லியில் கடைமைப் பாதையில் வரும் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறும் அலங்கார ஊா்திகளின் பட்டியலில் இம்முறை தமிழகம் இடம் பெறவில்லை. அதேவேளையில், பஞ்சாப், ஹரிய... மேலும் பார்க்க

தலைநகரில் காற்றின் தரம் ‘கடுமை’ பிரிவில் நீடிப்பு! இன்று மழைக்கு வாய்ப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பனிமூட்டம் நிறைந்து காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 7.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இதற்கிடையே, திங்கள்கிழமை (டிசம்பா் 23) வானம் மேகமூட்டத்துடன... மேலும் பார்க்க

காணாமல் போன 22 வயது பெண் தில்லி ஹோட்டலில் இறந்த நிலையில் மீட்பு

சில தினங்களுக்கு முன்பு தனது இல்லத்தில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 22 வயது பெண், தில்லியின் பஸ்சிம் விஹாா் பகுதியில் உள்ள ஹோட்டலில் இறந்து கிடந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். டெல்... மேலும் பார்க்க

அலங்கார ஊா்தி விவகாரம்: கேஜரிவால் மீது பாஜக சாடல்

குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊா்தி இடம்பெறாமல் போனது தொடா்பாக கேஜரிவால் எழுப்பிய கேள்விக்கு தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா பதிலடி அளித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘தேசிய விழா நெர... மேலும் பார்க்க

போலி கனவுகளை விற்கிறாா் கேஜரிவால்! தில்லி பாஜக கடுமையாக சாடல்

போலி கனவுகளை விற்றுக் கொண்டிருக்கிறாா் கேஜரிவால் என்று தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தது. தில்லி மாநகரில் உள்ள பெண்களுக்கு மாதாந்திர உதவியாக ரூ.1,000 வழங்கும் முக்ய மந்திரி மகிளா சம்மான் யோஜனாவ... மேலும் பார்க்க