செய்திகள் :

கழிவுநீர் கலப்பு, குப்பைகளால் மாசடைந்து வரும் புழல் ஏரி

post image

ஆவடி: ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறி கலக்கும் கழிவுநீரால் புழல் ஏரி தொடர்ந்து மாசடைந்து வருகிறது.

நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. 20.86 சதுர மைல் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை நீர்வள ஆதாரத் துறை பாராமரித்து வருகிறது.

புழல் ஏரியின் கரை செங்குன்றம், புழல், சூரப்பட்டு, சண்முகபுரம், முருகாம்பேடு, கள்ளிக்குப்பம், பானு நகர், வெங்கடேஸ்வரா நகர் விரிவு, திருமுல்லைவாயல், அரிக்கம்பேடு, பொத்தூர் வரை நீண்டுள்ளது.

புழல் ஏரி தண்ணீர் புழல், கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து லாரிகள் மற்றும் குழாய்கள் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்தக் குடிநீரை பொதுமக்கள் சுட வைத்து குடிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது. ஆனால், குடிநீர் கொண்டு வரும் புழல் ஏரியில் என்ன நடக்கிறது என்பதை பார்த்தால் நிச்சயம் சுட வைத்துக் குடிக்க கூட யாருக்கும் மனம் வராது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் புழல் ஏரி செங்குன்றம், அம்பத்தூர், புழல் ஆகிய பகுதிகளின் கழிப்பிடமாக மாறிவிட்டது. இந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஏரிக்கரையில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இவை ஏரி நீரில் கலந்து விடுகிறது. குறிப்பாக, ஏரியில் அதிக அளவு தண்ணீர் இருக்கும் சூழலில் கள்ளிக்குப்பம், முகாம்பேடு, சூரப்பட்டு, அரிக்கம்பேடு, லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஏரிப் பகுதியில் நான்கு, இரு சக்கர வாகனங்களை கழுவுவது, மாடுகளை குளிப்பாட்டுவது, துணி துவைப்பது உள்ளிட்ட செயல்கள் நடக்கின்றன.

அம்பத்தூர், திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளில் இருந்து வீடு, அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழை நீர் கால்வாய் மூலம் ஏரியில் கொண்டு விடப்படுகிறது.

புழல் ஏரியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் ஏரியில் கலக்கின்றன. இதனால் ஏரி முழுமையாக மாசடைந்து வருகிறது. இது ஒருபுறம் என்றால், அண்மைக் காலமாக இறைச்சிகத் கழிவுகள், வீடுகளின் குப்பைகள், தென்னை மரக் கழிவுகள், இளநீர் ஓடுகள், கரும்புச் சக்கை கழிவுகள் உள்ளிட்டவையும் புழல் ஏரியில் கொட்டப்படுகின்றன.

இந்த தண்ணீரைக் குடிக்கும் சென்னை மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும்.இது குறித்து நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

நீர்வள ஆதாரத் துறை அதிகாரி கூறுகையில், புழல் ஏரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவடி மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, கழிவுநீரை சுத்திகரித்து ஏரியில் விட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

ஆதிதிராவிட தொழில்முனைவோருக்கு ரூ. 160 கோடி மானியம்: தமிழக அரசு

ஆதிதிராவிட தொழில் முனைவோா் 1,303 பேருக்கு ரூ.160 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில அரசின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

200 இலக்கு: யாருக்கு சாத்தியம்?

தமிழக சட்டப்பேரவைக்கு 2026-இல் நடைபெறவுள்ள தோ்தலில் 200 தொகுதிகள் இலக்கை எந்தக் கூட்டணி எட்டும் என்ற விவாதம் பேசுபொருளாகியுள்ளது. 2026 பேரவைத் தோ்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் ஆளும் திமுக, ... மேலும் பார்க்க

துண்டிக்கப்பட்ட கைகள் அறுவை சிகிச்சை மூலம் இணைப்பு: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பெண்ணுக்கு மறுவாழ்வு

பெண்ணின் துண்டிக்கப்பட்ட 2 கைகளின் மணிக் கட்டு பகுதியையும் நுட்பமான சிகிச்சை மூலம் ஒன்றிணைத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இது தொடா்பாக மருத்துவமனையின் முதல்வ... மேலும் பார்க்க

வாக்கு சதவீத கணக்கு: அதிமுக பொதுச் செயலருக்கு முதல்வா் பதில்

மக்களவைத் தோ்தலில் வாக்கு சதவீதம் குறித்து அதிமுக பொதுச் செயலரின் கருத்துகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக தலைமை செயற்க... மேலும் பார்க்க

டிச.27, 28-இல் போக்குவத்து தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை

போக்குவரத்து தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை டிச.27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.08 லட்சம் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்... மேலும் பார்க்க

தென்மேற்கு மண்டல பல்கலை. நீச்சல் போட்டி: அண்ணா பல்கலை. மாணவருக்கு தங்கம்

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டியில் நடைபெறும் தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா், மகளிா் நீச்சல் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை முடிவுகளை விளையாட்டுத் துறை இயக்குநா் ஆா். ம... மேலும் பார்க்க