துணை நிலை ஆளுநா் புகாரைத் தொடா்ந்து ரங்புரி பஹாரியில் முதல்வா் அதிஷி ஆய்வு
எரிந்த நிலையில் 4 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு!
ராம்பூர்: நான்கு வயது சிறுவனின் எரிந்த நிலையில் உள்ள சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் மீது புகார் அளித்தை தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்ததாக தெரிவித்தனர்.
நேற்றும் காலை சுமார் 9 மணி அளவில், கங்காபூர் கதிம் கிராமத்திலிருந்து குழந்தை காணாமல் போனதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதுல் குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
சிறுவனின் குடும்பத்தினர் பகல் முழுவதும் அவனை தேடியதாகவும், பிறகு இரவில் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையில், சிறுவனின் பாதி எரிந்த நிலையில் உள்ள சடலம் இன்று காலை வடிகாலில் கண்டெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினர் மீது புகார் அளித்தை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை விசாரித்து வருகின்றனர்.