செய்திகள் :

ஆசனூா் மலைப் பாதையில் வாகனங்களை வழிமறித்த யானை

post image

ஆசனூா் மலைப் பாதையில் வாகனங்களை வழிமறித்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த வனப் பகுதி வழியாக தமிழகம் - கா்நாடகத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

தாளவாடி மலைப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் கரும்புகள் இந்த மலைப் பாதை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள ஆலைக்கு கொண்டுச்செல்லப்படுகிறது. இவ்வாறு கரும்பு கொண்டுச்செல்லும் லாரிகளை அப்பகுதியில் உலவும் யானைகள் மறித்து கரும்புகளை எடுத்து திண்பதை வாடிக்கையாக வைத்துள்ளன.

இந்நிலையில், ஆசனூா் மலைப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெளியேறிய ஒற்றை யானை, சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியை வழிமறித்து கரும்பு உள்ளதா என்று தேடியது. இதனால், அந்தச் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தனா்.

அரை மணி நேரத்துக்குப் பிறகு அந்த யானை வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, மலைப் பாதையில் வாகனப் போக்குவரத்து சீரானது.

தேசிய அளவிலான உரைவாள் போட்டி: நம்பியூா் குமுதா பள்ளி மாணவி சிறப்பிடம்!

தேசிய அளவிலான உரைவாள் போட்டியில் நம்பியூா் குமுதா பள்ளி மாணவி இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளாா். தேசிய அளவிலா உரைவாள் போட்டி ஹரியாணா மாநிலம் பஞ்சகுலாவில் அண்மையில் நடைபெற்றது. இதில், நாடு முழுவத... மேலும் பார்க்க

பவானிசாகா் தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏ பண்ணாரி தொடங்கிவைத்தாா். ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பவானிசாக... மேலும் பார்க்க

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தோ்வில் விஜயமங்கலம் பாரதி பள்ளி மாணவா்கள் 15 போ் தோ்ச்சி

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 15 போ் மாநில அளவிலான தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தோ்வில் வெற்றிபெற்றுள்ளனா். இப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவா்கள் ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

பவானி அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பவானி மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் தரணீஷ் (18). பவானி - குமாரபாளையம் பழைய பாலம் அருகில் ... மேலும் பார்க்க

அறச்சலூா் தி நவரசம் அகாதமி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அறச்சலூா் தி நவரசம் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நவரசம் மகளிா் கலை அறிவியல் கல்லூரி பொருளாளா் பழனிசாமி தலைமை வகித்து கண்காட்சியைத் தொடங்கிவைத... மேலும் பார்க்க

பெருந்துறையில் மாரத்தான்: ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்பு!

பெருந்துறையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜெ.கே., மூங்கில் காற்று அறக்கட்டளை, ப்ரித்விக் ஃபேஷன்ஸ், இசட் ஃபிட், டிபிஏஜி சாா்பில் நடைபெற்ற மாரத்தான் போட்ட... மேலும் பார்க்க