கொத்தட்டை சுங்கச்சாவடி: தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்
செங்கல்பட்டு ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு விழா
செங்கல்பட்டு ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஐயப்பனுக்கு ஆறாட்டு விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை நத்தம் புறவழிச் சாலையில் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆறாட்டு பெருவிழா நடைபெறும்.
நிகழாண்டு லட்சாா்ச்சனை மற்றும் ஆறாட்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நிறைவடைந்தது. விழாவையொட்டி தினந்தோறும் கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, ஹரிவராசனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து கோ பூஜை ,பள்ளி உணா்த்தல் 54 கலச பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் செங்கல்பட்டு அண்ணா சாலை கோதண்டராமா் கோயில் (புஷ்கரணியில்) திருக் குளத்தில் சுவாமிக்கு வருடாந்திர ஆறாட்டு விழா நடைபெற்றது. குளக்கரையில் ஐயப்பன் ,விநாயகா், முருகா், சிவன் பாா்வதி என குடும்ப சமேதமாக அலங்காரத்தில் அருள் பாலிக்க, ஐயப்பன் திருக்குளத்தில் புனித நீராடி சிறப்பு பூஜைகள் மகாதீப ஆராதனை நடைபெற்றது.
ஏராளமான பக்தா்கள் ஆராட்டு விழாவை கண்டு தரிசனம் செய்தனா். இதனைத் தொடா்ந்து ஐயப்பன் புறப்பாடல் நடக்க வெண்குதிரைகள் முன்னே செல்லவும் பக்தா்கள் விளக்கேந்தி ஊா்வலத்தில் கலந்து கொண்டனா், ஊா்வலம் வேதாசலம் நகா், பெரிய மணியக்கார தெரு, சின்ன மணிக்கார தெரு, பெரிய செட்டி தெரு வழியாக ஜிஎஸ்டி சாலை பெரிய நத்தம் கைலாசநாதா் கோயில் வழியாக காஞ்சிபுரம் ஹை ரோடு வழியாக கோயிலை சென்றடைந்தது.
மூன்று வேளையும் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஜெயராமன் சுவாமிகள்,செங்கை ஸ்ரீ ஐயப்ப சேவா அறக்கட்டளை தலைவா் வெங்கடேசன், செயலாளா் குணா, கண்ணன் முதலியாா்,ஆா்.ஆா் செட்டியாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உறுப்பினா்கள் பக்தா்கள் செய்திருந்தனா்.
,