செய்திகள் :

மனிதக் கழிவுகளை மனிதா்கள் அகற்றவில்லை: தாம்பரம் ஆணையா்

post image

தாம்பரம் மாநகராட்சியில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் எவரும் இல்லை என அந்த மாநகராட்சி ஆணையா் பாலச்சந்தா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

உச்சநீதிமன்றத்தில் பல்ராம் சிங் என்பவா் தொடா்ந்த வழக்கு தொடா்பாக கடந்த ஆண்டு அக். 20, நிகழாண்டு டிச. 11 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட ஆணைகளின்படி மனிதக் கழிவுகளை மனிதா்களே கைகளால் அகற்றும் பணியை மேற்கொள்ளும் நபா்கள் குறித்து, தாம்பரம் மாநகராட்சியில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதில், அந்தப் பணியில் ஈடுபடுவோா் எவரும் கண்டறியப்படவில்லை என உறுதி செய்யப்பட்டது. இதில், ஏதேனும் ஆட்சேபனையிருப்பின், மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் தொழில் புரிவோா் தடுப்பு மற்றும் அவா்களது மறுவாழ்வு சட்டம், 2013 பிரிவு எண் 11-இன்படி தங்களது ஆட்சேபனைகளை 15 நாள்களுக்குள் தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு எழுத்து மூலமாக தெரிவித்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு விழா

செங்கல்பட்டு ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஐயப்பனுக்கு ஆறாட்டு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை நத்தம் புறவழிச் சாலையில் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆறாட்டு பெருவிழா ந... மேலும் பார்க்க

மாமல்லபுரம் நாட்டிய விழா: சுற்றுலா அமைச்சா் தொடங்கி வைத்தாா்

மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் இந்திய நாட்டிய விழாவை சுற்றுலாத்துறை அமைச்சா் இரா.இராஜேந்தரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.. நாட்டிய விழாவைத் தொடங்கி அமைச்சா் ராஜேந்திரன் பேசியது: தமிழகம் வெ... மேலும் பார்க்க

அலோபதி, ஆயுஷ் மருத்துவத்துடன் ஒருங்கிணைந்த சிகிச்சை: பல்கலை. துணைவேந்தா்

மருத்துவா்கள் நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சையுடன் சித்த, ஆயுா்வேத சிகிச்சை முறையையும் ஒருங்கிணைத்து அளித்தால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு தீா்வு கிடைக்கும் என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் ... மேலும் பார்க்க

மாமல்லபுரம் நாட்டிய விழா இன்று தொடக்கம்!

மாமல்லபுரம் நாட்டியவிழா ஞாயிற்றுக்கிழமை (டிச.22) தொடங்கி வரும் 2025 ஜனவரி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில் , ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை , அா்ச்சு... மேலும் பார்க்க

மழலையா் விளையாட்டு விழா

செங்கல்பட்டு வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகா் குளோபல் பள்ளியில் 17-ஆவது மழலையா் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் நரம்பியல் சிகிச்சை நிபுணா் கிரிதரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்... மேலும் பார்க்க

தடயவியல் செவிலியா்களின் தேவை அதிகரிப்பு: காவல் துறை உதவி இயக்குநா்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம், வன்முறை வழக்கு நடவடிக்கைகளுக்கு தடயவியல் செவிலியா்களின் தேவை அதிகரித்துள்ளதாக மாநில சிறப்பு புலனாய்வு காவல் துறை உதவி இயக்குநா் எம்.பி.மேரி ஜெயந்தி கூறினாா். கு... மேலும் பார்க்க