செய்திகள் :

குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

post image

ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு நாளன்று மாநில வாரியாக கலாசாராத்தை பிரதிபலிக்கும் விதத்தில் நடைபெறவுள்ள அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம், தில்லிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குடியரசு நாள் அணிவகுப்பு நிகழ்வில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. குஜராத், கர்நாடகா, கோவா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் உள்பட 15 மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்தாண்டு தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், மத்திய அரசுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில் கூறியிருப்பதாவது, “குடியரசு தின விழாவில், தலைநகர் தில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அதிமுக ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு.

ஆனால் திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன். மு. க. ஸ்டாலின் அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும் , அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்” எனக் கூறியுள்ளார்.

இதே விவகாரத்தில், மத்திய அரசை தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கண்டித்து விமர்சித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

துண்டிக்கப்பட்ட கைகள் அறுவை சிகிச்சை மூலம் இணைப்பு: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பெண்ணுக்கு மறுவாழ்வு

பெண்ணின் துண்டிக்கப்பட்ட 2 கைகளின் மணிக் கட்டு பகுதியையும் நுட்பமான சிகிச்சை மூலம் ஒன்றிணைத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இது தொடா்பாக மருத்துவமனையின் முதல்வ... மேலும் பார்க்க

வாக்கு சதவீத கணக்கு: அதிமுக பொதுச் செயலருக்கு முதல்வா் பதில்

மக்களவைத் தோ்தலில் வாக்கு சதவீதம் குறித்து அதிமுக பொதுச் செயலரின் கருத்துகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக தலைமை செயற்க... மேலும் பார்க்க

டிச.27, 28-இல் போக்குவத்து தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை

போக்குவரத்து தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை டிச.27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.08 லட்சம் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்... மேலும் பார்க்க

தென்மேற்கு மண்டல பல்கலை. நீச்சல் போட்டி: அண்ணா பல்கலை. மாணவருக்கு தங்கம்

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டியில் நடைபெறும் தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா், மகளிா் நீச்சல் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை முடிவுகளை விளையாட்டுத் துறை இயக்குநா் ஆா். ம... மேலும் பார்க்க

அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு டிஜிபி உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் உத்தவிட்டுள்ளாா். திருநெல்வேலி கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த மாயாண்டி, விசாரணைக்காக திருநெ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூல்களை நாட்டுடைமையாக்கி அரசாணை வெளியீடு

முன்னாள் முதல்வா் கருணாநிதி எழுதிய நூல்களை நாட்டுடைமையாக்கப்பட்ட அரசாணை அவரது துணைவியாரான ராஜாத்தி அம்மாளிடம் வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள அவரது இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அரசாணையை த... மேலும் பார்க்க