செய்திகள் :

அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு டிஜிபி உத்தரவு

post image

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் உத்தவிட்டுள்ளாா்.

திருநெல்வேலி கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த மாயாண்டி, விசாரணைக்காக திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, காரில் வந்த 7 போ் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்தக் கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் தேவையான அளவு ஆயுதம் தாங்கிய காவலா்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது குறித்து தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் வெளியிட்ட உத்தரவு:

சமீபத்தில் திருநெல்வேலி நீதிமன்ற சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் துணை ஆய்வாளா் மற்றும் மற்றொரு காவல் துறை அதிகாரி ஆகியோா் துப்பாக்கி ஏந்தி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்.

ஏற்கெனவே உள்ள பாதுகாப்புடன் கூடுதலாக இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும். காவலா்கள் பிஸ்டல் உடன் நீண்ட தூரம் சுடும் துப்பாக்கிகள் ஆகிய இரண்டையும் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.

இதை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தற்காப்புக்காகப் பயன்படுத்த வேண்டும். இது தொடா்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து டிச.23-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ஆதிதிராவிட தொழில்முனைவோருக்கு ரூ. 160 கோடி மானியம்: தமிழக அரசு

ஆதிதிராவிட தொழில் முனைவோா் 1,303 பேருக்கு ரூ.160 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில அரசின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

கழிவுநீர் கலப்பு, குப்பைகளால் மாசடைந்து வரும் புழல் ஏரி

ஆவடி: ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறி கலக்கும் கழிவுநீரால் புழல் ஏரி தொடர்ந்து மாசடைந்து வருகிறது. நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலி... மேலும் பார்க்க

200 இலக்கு: யாருக்கு சாத்தியம்?

தமிழக சட்டப்பேரவைக்கு 2026-இல் நடைபெறவுள்ள தோ்தலில் 200 தொகுதிகள் இலக்கை எந்தக் கூட்டணி எட்டும் என்ற விவாதம் பேசுபொருளாகியுள்ளது. 2026 பேரவைத் தோ்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் ஆளும் திமுக, ... மேலும் பார்க்க

துண்டிக்கப்பட்ட கைகள் அறுவை சிகிச்சை மூலம் இணைப்பு: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பெண்ணுக்கு மறுவாழ்வு

பெண்ணின் துண்டிக்கப்பட்ட 2 கைகளின் மணிக் கட்டு பகுதியையும் நுட்பமான சிகிச்சை மூலம் ஒன்றிணைத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இது தொடா்பாக மருத்துவமனையின் முதல்வ... மேலும் பார்க்க

வாக்கு சதவீத கணக்கு: அதிமுக பொதுச் செயலருக்கு முதல்வா் பதில்

மக்களவைத் தோ்தலில் வாக்கு சதவீதம் குறித்து அதிமுக பொதுச் செயலரின் கருத்துகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக தலைமை செயற்க... மேலும் பார்க்க

டிச.27, 28-இல் போக்குவத்து தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை

போக்குவரத்து தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை டிச.27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.08 லட்சம் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்... மேலும் பார்க்க