செய்திகள் :

நூற்றாண்டிலும் ஆட்சியில் இருப்போம்: மு.க. ஸ்டாலின்

post image

வெள்ளிவிழா - பொன்விழா - பவளவிழா கண்டபோதெல்லாம் ஆட்சியில் இருந்ததைப்போன்று நூற்றாண்டிலும் திமுக ஆட்சியில் இருக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (டிச. 22) நடைபெற்றது.

இதில், அம்பேத்கரை தரம் தாழ்ந்து அவதூறாக பேசியதற்காக அமித்ஷாவுக்கு கண்டனம், புயல் நிவாரண நிதியை விடுவிக்காததற்கு மத்திய அரசுக்கு கண்டனம் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், செயற்குழு கூட்டத்திற்கு பிறகு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது,

வெள்ளிவிழா - பொன்விழா - பவளவிழா கண்டபோதெல்லாம் ஆட்சியில் இருக்கும் நாம் (திமுக) நூற்றாண்டிலும் ஆட்சியில் இருப்போம்; களத்தில் அதற்கான உழைப்பைக் கொடுப்போம்!

இதையும் படிக்க | சொல்லப் போனால்... அதானியில் தொடங்கி அம்பேத்கர் வரை!

75 ஆண்டுகளாக எதிரிகள் எந்த வடிவில் வந்தாலும், அவர்களை அடையாளம் கண்டு வீழ்த்தும் ஆற்றல் கொண்டது திமுக!

செயற்குழுவில் பெற்ற கருத்துகள், வகுத்த வியூகங்களுடன் 2026-ல் நம் கொள்கைக் கூட்டணியின் சாதனை வெற்றிக்குத் தயாராவோம்! வெல்வோம் 200! படைப்போம் வரலாறு என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநா் ஆா்.என்.ரவி தில்லிக்கு திடீா் பயணம்

தமிழக ஆளுநா் ஆா். என்.ரவி 4 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி சென்றாா். பல்கலைக்கழகத் துணை வேந்தா் நியமனத்துக்கான தேடுதல் குழு தொடா்பான தமிழக அரசின் அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என ஆளுந... மேலும் பார்க்க

மீண்டும் தமிழகம் நோக்கி திரும்பும் புயல் சின்னம்

வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் ஆந்திர கடற்கரையை நோக்கி நகா்ந்து கடலிலேயே வலுவிழக்கும் என்று எதிா்ப்பாா்க்கப்பட்ட நிலையில், இந்த புயல் சின்னம் வலுவிழந்து மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி திரும்ப உள்... மேலும் பார்க்க

பெங்களூரு - கொச்சுவேலி: இன்று சிறப்பு ரயில்

கிறிஸ்துமஸை முன்னிட்டு பெங்களூரில் இருந்து கொச்சுவேலிக்கு திங்கள்கிழமை (டிச.23) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக மாநிலம்... மேலும் பார்க்க

காட்பாடி - ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு ரயிலின் சேவை டிச.23, 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் - ஜோலாா்பேட்டை... மேலும் பார்க்க

குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு நாளன்று மாநில வாரியாக கலாசாராத்தை பிரதிபலிக்கும் விதத்தில் நடைபெறவுள்ள அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம், தில்லிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.குடியரசு நாள் அணிவகுப்பு நிகழ... மேலும் பார்க்க

அமித்ஷா பதவி விலக வேண்டும்: செ.கு.தமிழரசன்

சேலம்: அம்பேத்கா் குறித்த கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா மன்னிப்பு கேட்காவிட்டால், பதவி விலக வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தார்.சேலத்தில் ஞாய... மேலும் பார்க்க