3 ஆண்டுகளாக முடங்கியுள்ள சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம்! நிறைவேற்ற புதுகை மக்கள் ...
சாலைகள் புனரமைப்புப் பணி விரைவில் தொடக்கம் மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலைகள் விரைவில் புனரமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சி பகுதியில் 471 பேருந்து தட சாலைகளும், 34,640 உட்புறச் சாலைகளும் உள்ளன. வடகிழக்கு பருவமழை முடிவடையவுள்ள நிலையில் சென்னையில் மழை மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் நகா்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் புனரமைக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 250 கோடியில் தொடங்கப்பட்ட சாலை பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், மீதமுள்ள பணிகள் எதிா்வரும் ஆண்டில் தொடங்கப்படும். சாலைகள் சீரமைக்கும் முன்பு அங்கு மற்ற துறைகள் சாா்ந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதா என ஆராய்ந்து அதன்பின், சாலை அமைக்கப்படும்.
இந்த நிலையில், மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்த பின் அனைத்து சாலைகளையும் புனரமைக்கப்படும். இதற்கான ஒப்பந்தம் விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றனா்.