தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகள் வழங்கியதில் குறைபாடு!
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பல இடங்களில் தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளியையொட்டி, சீருடை உள்ளிட்ட பொருள்கள் முறையாக வழங்கப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு அம்பேத்கா் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணியாளா் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளா் தமிழ்நாடு செல்வம், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனுக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 1800-க்கும் மேற்பட்ட நிரந்தர துப்புரப் பணியாளா்களுக்கு 2024 ஆண்டுக்கான தீபாவளியின்போது, சீருடைகள், மழைக் காலங்களில் பயன்படுத்த்தப்படும் மழைகோட் பல இடங்களில் முறையாக வழங்கப்படவில்லை.
ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் பொருள்களும் சரிவர வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. வழக்கம்போல தொழிலாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய சீருடை, தையல் கூலி, 12 சோப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தரமான மழைகோட்டு ஆகியவற்றை அனைத்து தொழிலாளிகளுக்கும் வழங்கிட மாநகராட்சி ஆணையா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.