பெங்களூரு - கொச்சுவேலி: இன்று சிறப்பு ரயில்
கிறிஸ்துமஸை முன்னிட்டு பெங்களூரில் இருந்து கொச்சுவேலிக்கு திங்கள்கிழமை (டிச.23) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து திங்கள்கிழமை (டிச.23) இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06507) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கேரள மாநிலம் கொச்சுவேலி (திருவனந்தபுரம் வடக்கு) சென்றடையும்.
மறுமாா்க்கமாக கொச்சுவேலியில் இருந்து செவ்வாய்க்கிழமை (டிச.24) மாலை 5.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06508) மறுநாள் காலை 11.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இதில், ஏசி வகுப்பு பெட்டிகள்- 6, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் - 6, பொதுப்பெட்டிகள் -4 இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், கொல்லம் வழியாக இயக்கப்படும்.
கா்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து மங்களூருக்கு டிச.23, 27 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக டிச.24, 28 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் (எண்: 06505/06506) இயக்கப்படவுள்ளது.