செய்திகள் :

பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?

post image

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து நடிகர் ரஞ்சித் வெளியேற்றப்பட்டார்.

இந்நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே நடிகர் சத்யா வெளியேற்றப்பட்டார். பின்னர் நடிகை தர்ஷிகா வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் இருந்த நிலையில், நடிகர் ரஞ்சித் வெளியேற்றப்பட்டதால், தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளனர்.

கடந்த வாரம் கற்களை கொண்டுகோட்டை கட்டும் போட்டி நடத்தப்பட்டது. மூன்று நாள் நடைபெற்ற இப்பொட்டி சண்டையும் சச்சரவுமாகவே நடைபெற்றது.

மஞ்சரியுடன் அணிசேர்ந்து விளையாடிய ராணவ்வுக்கு ஜெஃப்ரியுடன் ஏற்பட்ட மோதலில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதல், ராணவ் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டார். இதனால் போட்டியில் இருந்து அவர் விலக்கப்பட்டார்.

இதையும் படிக்க: பஞ்சாப்: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி!

இந்த போட்டியில் ஜாக்குலின், ரயான் மற்றும் ரஞ்சித் இடம்பெற்ற அணி இறுதியில் வெற்றி பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அவர்களில் இருந்து ரயானை தேர்வு செய்து நாமினேசன் ஃப்ரீ பாஸை அந்த அணியினர் வழங்கினர்.

இந்த நிலையில், மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் ரஞ்சித் இந்நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டார்.

இறுதிப்போட்டிக்கு இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில், போட்டி கடுமையாக மாறும் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

வணிக வளாகத்தினுள் புகுந்த வாகனம்: 5 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் தப்பித்து ஒடிய வாகனம் வணிக வளாகத்தினுள் புகுந்ததில் ஐவர் படுகாயமடைந்த நிலையில், அந்த வாகன ஒட்டுநரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.டெக்ஸாஸ் மாகாண நெடுஞ்சாலை காவல்துற... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததில் 38 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் மாயம்!

காங்கோ நாட்டில் அதிகப்படியான நபர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்ததில் 38 பேர் பலியானதுடன், 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.வடகிழக்கு காங்கோவிலுள்ள புசிரா நதியில் கடந்த வெள்ளிகிழமை (டிச.20) போண்டே எ... மேலும் பார்க்க

பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிவு இபிஎஸ்ஸுக்கு இருக்கிறதா? - முதல்வர் ஸ்டாலின்

பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிவு இபிஎஸ்ஸுக்கு இருக்கிறதா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று (22-12-2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் ... மேலும் பார்க்க

டிச. 26, 27-ல் சென்னை, புறநகரில் மழை!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் டிச. 26, 27 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்ததாவத... மேலும் பார்க்க

குடிசையில் தீ பற்றியதில் 2 பேத்திகளுடன் முதியவர் பலி!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குடிசை வீட்டில் தீ பற்றியதில், தனது இரண்டு பேத்திகளுடன் 65 வயது முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். சிவப்புரி மாவட்டத்தில் நேற்று (டிச.21) இரவு 11.30 மணியளவில் குளிர் காய்வதற்... மேலும் பார்க்க

திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? - அண்ணாமலை கேள்வி!

தமிழக அரசு திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:தமிழக... மேலும் பார்க்க