செய்திகள் :

21 ஆம் நூற்றாண்டில் எந்த அணியும் செய்யாத சாதனை.. தென்னாப்பிரிக்காவில் அசத்திய பாகிஸ்தான்!

post image
கிரிக்கெட் வரலாற்றில் இந்த 21-ம் நூற்றாண்டில் தென்னாப்பிரிக்காவில் எந்தவொரு அணியும் செய்யாத சாதனையைப் பாகிஸ்தான் அணி நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. இதில், முதலில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசன் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றியது. மூன்றாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

ஹென்ரிச் கிளாசன்

அதைத்தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில், அதே ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை முதல் போட்டியில் வீழ்த்தி பதிலடி தந்தது. பின்னர், பாகிஸ்தான் அணி அதே வேகத்துடன், இரண்டாவது போட்டியிலும் தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி தந்து ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.

இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் (80), பாபர் அசாம் (73), கம்ரான் குலாம் (63) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 49.5 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் குவித்தது. அதையடுத்து, 330 ரன்கள் என்ற இலக்கை நோக்கிக் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், ஹென்ரிச் கிளாசனுக்கு (97) யாரும் பக்கபலமாக ஆடாததால், 43.1 ஓவரில் 248 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது தென்னாப்பிரிக்கா. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷகீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளும், நசீம் ஷா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி

இந்த வெற்றியின் மூலம், 21-ம் நூற்றாண்டில் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, மூன்று முறை ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனையைப் பாகிஸ்தான் படைத்திருக்கிறது. இதற்கு முன்னர் 2013, 2021-ல் தென்னாப்பிரிக்காவில் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றால், தென்னாப்பிரிக்காவை ஒருநாள் தொடரில் அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த முதல் அணி என்ற சாதனையையும் வரலாற்றில் பதிவுசெய்யும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC)

ஒருநாள் தொடர் முடிந்ததும், ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்ல தென்னாப்பிரிக்க அணிக்கு இது முக்கியமான தொடர். இதில், தென்னாப்பிரிக்கா இரண்டு டெஸ்டில் ஒன்றில் வெற்றிபெற்றாலே இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

Ashwin: "இக்கட்டான தருணங்களில் கூட..." - அஷ்வினுக்கு உருக்கமாகக் கடிதம் எழுதிய மோடி

நடந்துகொண்டிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் மூன்றாவது டெஸ்ட் மழை பாதிப்பால் டிராவில் முடிந்திருக்கிறது. இந்நிலையில் திடீரென தன் ஓய்வை அறிவித்திருந்தார் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரவ... மேலும் பார்க்க

Robin Uthappa: ரூ. 23 லட்சம் PF மோசடி... உத்தப்பாவிற்குக் கைது வாரண்ட்; பின்னணி என்ன?

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு வருங்கால வைப்பு நிதி மோசடி தொடர்பாகக் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிற... மேலும் பார்க்க

INDvPAK: பார்டரில் மைதானம்; இந்தியாவுக்கு ஒரு கேட்; பாகிஸ்தானுக்கு ஒரு கேட் - பாக் வீரரின் பலே ஐடியா

சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது. இந்திய அணியின் போட்டிகள் அத்தனையும் பொதுவான ஒரு நாட்டில் நடக்குமென்றும் ஐ.சி.சி அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்... மேலும் பார்க்க

Ashwin: "வெற்றிக்கு பின்னால் இருந்த கண்ணீர்..."- அஷ்வின் மனைவி ப்ரீத்தியின் உருக்கமான பதிவு

ஓய்வை அறிவித்த அஷ்வின் குறித்து அவரின் மனைவி ப்ரீத்தி உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், " கடந்த இரண்டு நாட்களாக எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதை ... மேலும் பார்க்க

AUSvIND: `இளம் வீரன்' - ஆஸ்திரேலியா அழைத்து வரும் 19 வயது ஓப்பனர் - யார் இந்த கான்ஸ்டஸ்?

பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிந்திருக்கும் நிலையில் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில், மீதமிருக்கும் 2 டெஸ்ட் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது. அதில... மேலும் பார்க்க

Ashwin: `மெல்போர்னில் சேர்ந்து பேட்டிங் ஆட வருவேன்!' - கோலியின் வாழ்த்தும், அஷ்வினின் பதிலும்!

அனைத்து விதமான ர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வை அறிவித்தார். இந்திய அணிக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அஷ்வின் இதுவரை 106 ... மேலும் பார்க்க