செய்திகள் :

இந்தியா தொடர், சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

post image

இந்தியாவுக்கு எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (டிசம்பர் 22) அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற ஜனவரி 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

இதையும் படிக்க: ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட வேண்டும்: முன்னாள் தலைமைப் பயிற்சியாளர்

ஒருநாள் அணியில் மீண்டும் ஜோ ரூட்

இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (டிசம்பர் 22) அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து ஒருநாள் அணியில் ஜோ ரூட் மீண்டும் இடம் பிடித்துள்ளார். அவர் கடைசியாக இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடியிருந்தார். அதன் பின், தற்போது மீண்டும் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதையும் படிக்க: ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்காக விளையாடவில்லை; மனம் திறந்த ஆகாஷ் தீப்!

இந்த மாதத்தின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது, பென் ஸ்டோக்ஸுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் அணித்தேர்வுக்கு கருத்தில் எடுத்துக்கொள்ளப் படவில்லை. இங்கிலாந்து அணியை டி20 மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டிலுமே ஜோஸ் பட்லர் கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அறிமுகமான ரிஹான் அகமது, டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிட்ட ஹாரி ப்ரூக், இந்த முறை அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி

ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக், பிரைடான் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டான், ஜேமி ஸ்மித், லியம் லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், ஜோ ரூட், சாக்யூப் மஹ்முத், பில் சால்ட், மார்க் வுட்.

டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி

ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரிஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக், பிரைடான் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டான், ஜேமி ஸ்மித், லியம் லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், சாக்யூப் மஹ்முத், பில் சால்ட், மார்க் வுட்.

இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டிகள் விவரம்

முதல் டி20 - ஜனவரி 22, ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா

2-வது டி20 - ஜனவரி 25, சேப்பாக்கம், சென்னை

3-வது டி20 - ஜனவரி 28, ராஜ்கோட்

4-வது டி20 - ஜனவரி 31, எம்சிஏ மைதானம், புணே

5-வது டி20 - பிப்ரவரி 2, வான்கடே மைதானம், மும்பை

இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் போட்டிகள் விவரம்

முதல் ஒருநாள் - பிப்ரவரி 6, நாக்பூர்

2-வது ஒருநாள் - பிப்ரவரி 9, கட்டாக்

3-வது ஒருநாள் - பிப்ரவரி 12, அகமதாபாத்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேப்டனாக புதிய சாதனை படைத்த ஹர்மன்பிரீத் கௌர்!

இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பீரித் கௌர் ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 22) நடைபெற்... மேலும் பார்க்க

ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளேன்: சாம் கொன்ஸ்டாஸ்

ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் ட... மேலும் பார்க்க

பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, பந்துவீச்சில் ரேணுகா சிங் அசத்தல்; இந்திய அணி அபார வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர... மேலும் பார்க்க

நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் அணியில் இணைவார்; முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நம்பிக்கை!

ஆஸ்திரேலிய வீரர் நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் அந்த அணியில் இடம்பிடிப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் ... மேலும் பார்க்க

முதல் ஒருநாள்: ஸ்மிருதி மந்தனா அசத்தல்; மே.இ.தீவுகளுக்கு 315 ரன்கள் இலக்கு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ... மேலும் பார்க்க

வலைப்பயிற்சியில் இந்திய வீரர்கள் காயம்!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் நிறைவ... மேலும் பார்க்க