அடுத்த 3 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.