மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தேசத்தந்தை: பாடகர் சர்ச்சை பேச்சு!
திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ப்ட 1000 பேர் வரையில் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசின் செயல்திறனைப் பாராட்டியும், தமிழ்நாடு மீதான மத்திய அரசின் வஞ்சகத்தைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
அவற்றில் சில முக்கியத் தீர்மானங்கள்
அம்பேத்கரை தரம்தாழ்த்தி, அவதூறாகப் பேசி, அவரின் தியாகத்தை இழிவுபடுத்தியதாக அமித் ஷாவை கண்டித்து தீர்மானம்
அமித் ஷாவை கண்டித்து போராட்டம் நடத்திய திமுக எம்.பி.க்கள், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாராட்டு
பெஞ்சல் புயல் பாதிப்பு நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்கிட வலியுறுத்தல்; பெஞ்சல் புயலின்போது, சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக தீர்மானம்
மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலச் சட்டத்தை ஆதரித்ததாக அதிமுக, பாஜகவை கண்டித்து தீர்மானம்
இதையும் படிக்க:சொல்லப் போனால்... அதானியில் தொடங்கி அம்பேத்கர் வரை!
தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு போதுமான நிதி வழங்காமல், மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சிப்பதாகக் கண்டனம்
சாத்தனூர் அணையை படிப்படியாக திறக்க உத்தரவிட்டு, உயிர்ச்சேதத்தை தவிர்த்த முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு பாராட்டு
குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு எதிர்ப்பு; கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்க தமிழக அரசு செயல்படுத்தும் புதிய திட்டத்துக்கு பாராட்டு
திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு
தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்கக் கோரி தீர்மானம்