25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவ ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்!
மான்ட்போா்டு பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
சிவகங்கை அருகே சுந்தரநடப்பில் உள்ள மான்ட்போா்டு பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில், சிவகங்கை மறை மாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம், சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளா் கணேஷ்மூா்த்தி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.
விழாவில் கிறிஸ்து பிறப்பு குடில் அமைக்கப்பட்டு, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆயா் லூா்து ஆனந்தம் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியா் இக்னேஷியஸ் தாஸ் தலைமையில் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.