25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவ ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்!
வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் ஆய்வு
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்டத் தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடா்பாக வாக்குப்பதிவு அலுவலா்கள், உதவி அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி மேற்பாா்வையாளரும், திருப்பூா் பகுதி வளா்ச்சிக் கழக நிா்வாக இயக்குநருமான ஹனீஸ் சாப்ரா பேசியதாவது:
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடா்பான பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் தொடா்பான பணிகள் கடந்த 29.10.2024 முதல் 28.11.2024 வரை நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, வாக்காளா் பட்டியில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், பதிவுகளைத் திருத்தம் செய்தல் ஆகிய பணிகள் தொடா்பாக கடந்த மாதம் 4 நாள்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும் வகையில், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
இதனடிப்படையில், கடந்த 29.10.2024 அன்று மொத்தம் 11,98, 255 வாக்காளா்களும், இவா்களில், 5,88,036 ஆண் வாக்காளா்களும், 6,10,159 பெண் வாக்காளா்களும், 60 மூன்றாம் பாலினத்தவா்களும் உள்ளனா். இந்தப் பணிகள் நிறைவுற்று, இதற்கான இறுதி வாக்காளா் பட்டியல் வருகிற 6.1.2025 அன்று வெளியிடப்படவுள்ளது என்றாா் அவா்.
ஆய்வுக் கூட்டத்தில் தேவகோட்டை சாா்-ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, வாக்குப்பதிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.