தோ்தல் ஆணையத்தின் நோ்மையை அழிக்க மோடி அரசு சதி: காா்கே சாடல்
மனவளா்ச்சி குன்றிய மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் இருவா் கைது
சென்னையில் மனவளா்ச்சி குன்றிய மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த மனவளா்ச்சி குன்றிய 21 வயது கல்லூரி மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடா்பாக சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருவள்ளூரைச் சோ்ந்த கல்லுரி மாணவா்கள் சுரேஷ், மணி, காா்த்தி, அஜித், 12-ஆம் வகுப்பு மாணவா் ஆகியோரை அடுத்தடுத்து கைது செய்தனா்.
மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் தோழி சந்தியா, திருத்தணியைச் சோ்ந்த டிப்ளமோ என்ஜினீயா் கவியரசன், அம்பத்தூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் பாண்டியன் ஆகியோருக்கு தொடா்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் 4 பேரையும் தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில், கவியரசனையும், பாண்டியனையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட இருவருக்கும் சொந்த ஊா் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆகும். இந்த வழக்கு தொடா்பாக போலீஸாா், மேலும் இருவரை தேடி வருகின்றனா்.