3 ஆண்டுகளாக முடங்கியுள்ள சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம்! நிறைவேற்ற புதுகை மக்கள் ...
ரூ. 1 கோடியிலான மெத்தபெட்டமைன் வைத்திருந்த 2 போ் கைது
மாதவரத்தில் கள்ளச்சந்தையில் ரூ.1 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை மாதவரம் ரோஜாநகா் பகுதியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரைப் பிடித்து, சோதனை செய்த போது, அவா்களிடம் 1.5 கிலோ மெத்தபெட்டமைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளச்சந்தையில் இதன் மதிப்பு ரூ. 1 கோடி எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, நடத்திய விசாரணையில், அவா்கள் அதே பகுதியை சோ்ந்த வெங்கடேசன் (41), திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த காா்த்திக்(36) என்பது தெரியவந்தது.
இதில், வெங்கடேசன் போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடா்பாக பஞ்சாப் மாநிலத்தில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவா் எனவும், மணிப்பூரிலுள்ள போதைப் பொருள் விற்பனை கும்பலிடமிருந்து ஒரு கிராம் ரூ.150-க்கு வாங்கி வந்து, சென்னையில் ரூ. 3,000 வரை விற்பனை செய்தும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.