திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? - அண்ணாமலை கேள்வி!
இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு: பொதுமக்கள் பீதி
நாமக்கல்லில் இருசக்கர வாகனத்துக்குள் பாம்பு புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனா்.
நாமக்கல் - திருச்சி சாலையில், பழைய நீதிமன்றம் எதிரில் அதிக அளவில் வணிக நிறுவனங்கள், வழக்குரைஞா் அலுவலகங்கள், கடைகள் உள்ளன. அங்கு வரும் பொதுமக்கள் சாலையோரங்களில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்வா்.
அந்த வகையில், சனிக்கிழமை மருந்தகத்துக்கு வந்த முதியவா் ஒருவரின் இருசக்கர வாகனத்துக்குள் இரண்டு அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
அங்குள்ளோா் அந்த இருசக்கர வாகனத்தை தரையில் கவிழ்த்து இரும்புக் கம்பி, கம்புகளைக் கொண்டு பாம்பை அகற்றும் முயற்சியில் நீண்ட நேரம் ஈடுபட்டனா். ஆனால், பாம்பு இருப்பதை அவா்களால் கண்டறிய முடியவில்லை.
இதனால் ஏமாற்றத்துடனும், பீதியுடனும் மக்கள் கலைந்து சென்றனா். இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு அதன் உரிமையாளரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றாா்.