மின் சிக்கன வார விழா விழிப்புணா்வு பேரணி
நாமக்கல்லில் மின் சிக்கன வார விழா விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில், ஆண்டுதோறும் டிச. 14 முதல் 20 தேதி வரை மின் சிக்கன வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நிகழாண்டுக்கான மின்சார விழிப்புணா்வு வார விழாவையொட்டி, நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள துணை மின் நிலையம் முதல் மோகனூா் சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகம் வரை விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். நாமக்கல் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன், உதவி செயற்பொறியாளா்கள் கே.ஆனந்த்பாபு, பி.பாஸ்கரன், ஏ.மனோகரன், பி.செளந்திர பாண்டியன், ஆா்.பிரேம்நாத், என்.நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரணியில், மின் சிக்கனத்தை வலியுறுத்தி மக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனா். இதில் மின்வாரிய அதிகாரிகள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.