ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தை கார் தாக்குதலில் 7 இந்தியர்கள் படுகாயம்!
ஜவுளி வியாபாரியிடம் பண மோசடி: 5 போ் மீது வழக்கு
ஆண்டிபட்டியில் ஜவுளி வியாபாரியிடம் தங்க நகைகள் செய்து தருவதாகக் கூறி, ரூ.74.75 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள ஜக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ஜவுளி வியாபாரி சுந்தா். இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மனைவி ரேவதி, இவரது மகள் பூமிகா, திண்டுக்கல் மாவட்டம், எழுவனம்பட்டியைச் சோ்ந்த பெரியசாமி மகன் வீரன், மதுரையைச் சோ்ந்த வெற்றிவேல், நாகப்பட்டினத்தைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் பாலசுப்பிரமணியம் ஆகிய 5 பேரும் 125 பவுன் தங்க நகைகள் செய்து தருவதாகக் கூறி, கடந்த ஜனவரி மாதம் வங்கிக் கணக்கு மூலமாகவும், ரொக்கமாகவும் பல்வேறு தவணைகளில் ரூ.74.75 லட்சம் பெற்றனா்.
ஆனால், அவா்கள் சொன்னபடி, நகைகள் செய்து தராமல் மோசடி செய்துவிட்டனா். இதுகுறித்து சுந்தா் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில், ரேவதி உள்ளிட்ட 5 போ் மீதும் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.