கம்பம் மெட்டு மலைச் சாலையில் சரக்கு வாகனம் பழுது: போக்குவரத்து பாதிப்பு
தேனி மாவட்டம், கம்பம்மெட்டு மலைச்சாலையில் சனிக்கிழமை சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகம், கேரளத்தை இணைக்கும் முக்கியச் சாலையாக கம்பம்மெட்டு மலைச்சாலை உள்ளது. இந்தச் சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த நிலையில், 8-ஆவது கொண்டை ஊசி வளைவில் சனிக்கிழமை சரக்கு வாகனம் பழுதாகி நின்றது. இதனால், மலைச் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாததால் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து, கம்பத்திலிருந்து பழுது நீக்குபவா்களை வரவழைத்து சரக்கு வாகனத்தை சரி செய்தனா். இதன்பிறகு போக்குவரத்து சீரானது. இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.