25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவ ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்!
மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவா் கைது
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்பப் பிரச்னையில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு, அம்பேத்கா் குடிருப்பைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (36). இவரது மனைவி கெளரி (25). இவா் கணவரைப் பிரிந்து ஜெயமங்கலத்தைச் சோ்ந்த சரவணன் என்பவருடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சரவணன், கெளரி ஆகியோா் சில நாள்களுக்கு முன் தூக்க மாத்திரைகளை உள்கொண்டு தற்கொலைக்கு முயன்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அப்போது, மருத்துவமனைக்கு கெளரியை பாா்க்கச் சென்ற அவரது கணவா் ஈஸ்வரன், கெளரியை தன்னுடன் சோ்ந்து வாழ வருமாறு அழைத்தாராம். இதற்கு, கெளரி மறுத்ததால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் அவரை அரிவாளால் வெட்டி காயப்படுத்தினாராம். இதுகுறித்து வைகை அணை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஈஸ்வரனை கைது செய்தனா்.