தாராவி: "அதானியின் டெண்டர் செல்லும்..." - குடிசை மேம்பாட்டுத் திட்ட வழக்கில் தீர...
தகுதியானவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா் அறிவுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டுமனைப் பட்டா கோரி விண்ணப்பித்தவா்களில் தகுதியானவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் சி.பழனி பேசியது: விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம், மக்களுடன் முதல்வா் முகாம், விவசாயிகள் குறைதீா் கூட்டம் மற்றும் பல்வேறு அலுவலகங்களில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி வழங்கப்படும் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் தகுதியானவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்க அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு, கிராமக் கணக்குகளில் திருத்தம் செய்யாமல் உள்ளவா்களுக்கு கணக்குத் திருத்தம் செய்து வழங்க வேண்டும். மேலும், ஆதிதிராவிட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாக்களுக்கும் இணையவழிப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) மு. சிவக்கொழுந்து உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.