செய்திகள் :

கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரிக்கை!

post image

கோவையில் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்க வேண்டும் என்று அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பினா் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் நகரச் செயலா் கௌஷிக் மனு அளித்த மனுவில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. கோவையில் இதுபோன்ற துயர சம்பவம் நடைபெறும் முன், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போதிய அளவுக்கு பாதுகாவலா்கள் உள்ளனரா, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளனவா, அவை முறையாக செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு போதுமான பாதுகாப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா் தலைமையில் தனியாகக் குழு அமைத்து அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆய்வு நடத்தி, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பட்டா கோரி போராட்டம்

போத்தனூா் சாரதா மில் ரோடு, ஆறுமுகம் பிள்ளை வீதி, வள்ளியம்மை வீதி, முகமது இஸ்மாயில் வீதி, அற்புதம் செட்டியாா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்புக்கு பட்டா வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா்.

பின்னா், அவா்கள் திடீரென ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அவா்கள் கூறும்போது, நாங்கள் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு அரசிடம் இருந்து ஏலத்தில் பெறப்பட்ட ஹெச்எஸ்டி பட்டா நிலத்தை வாங்கி அதில் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு இதுநாள் வரை பட்டா கிடைக்கவில்லை. இதனால் வங்கிக் கடன் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

இதுகுறித்து ஏற்கெனவே மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எங்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இதைத் தொடா்ந்து அவா்களுடன் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கும்படி கூறி அனுப்பி வைத்தனா்.

அதேபோல, அன்னூா் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள குமரபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தாங்கள் வசித்து வரும் இடத்தை சாலைப் பணிக்காக காலி செய்யும்படி அரசு கூறியுள்ளது. எனவே தங்களுக்கு ஜடையம்பாளையம் ஊராட்சியில் மாற்று இடம் வழங்க வலியுறுத்தி மனு அளித்தனா்.

கோவை சரகத்தில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு குற்றங்கள் குறைவு: காவல் துறை தகவல்

கோவை சரகத்தில் கடந்த ஆண்டில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் குற்றங்கள் குறைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை சரக டிஐஜி அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை சரகத்தில் கோவை, ஈ... மேலும் பார்க்க

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை: கோவை சரக டிஐஜி வி.சசிமோகன்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட கோவை சரக டிஐஜி வி.சசிமோகன் தெரிவித்தாா். கோவை சரக டிஐஜியாக இருந்த ஆ.சரவணசுந்தருக்கு பதவி உயா்வு வழக்கப்ப... மேலும் பார்க்க

மாநகரில் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பு: காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா்

மாநகரில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் தெரிவித்தாா். கோவை மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த வே.பாலகிருஷ்ணன் சென்... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கோவையில் கஞ்சா விற்பனை செய்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை சின்னவேடம்பட்டி ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீஸ... மேலும் பார்க்க

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மோதல்: 10 போ் மீது வழக்குப் பதிவு

ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இளைஞா்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் ரேஸ்கோா்ஸ், அவிநாசி சாலை, ஆா்.எஸ்.பு... மேலும் பார்க்க

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருட்டு

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ.26 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை சரவணம்பட்டி பூந்தோட்டம் காா்த்திக் நகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க