ராஜபாளையம்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போட்டோகிராபர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில் போட்டோகிராபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "ராஜபாளையத்தை அடுத்த சேத்துார் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர் முருகேசன்(வயது 55), போட்டோகிராபராக உள்ளார். சுப முகூர்த்த தினத்தையொட்டி ராஜபாளையத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் புகைப்படம் எடுப்பதற்காக முருகேசன் வந்துள்ளார்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த 8 வயது சிறுமியை நோட்டமிட்ட முருகேசன், ஆள் நடமாட்டம் இல்லாத அறைக்கு அருகே வைத்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது பதறிப்போன சிறுமி, அங்கிருந்து தப்பியோடி வந்து பெற்றோர்களிடம் இதுகுறித்து கூறியிருக்கிறார். தொடர்ந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக ராஜபாளையம் மகளிர் காவல்நிலைய போலீஸார் போலீசார் முருகேசனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்" என்றார்.