செய்திகள் :

குடியாத்தம் அருகே சிறுத்தை நடமாட்டம்

post image

குடியாத்தம் அருகே வன எல்லையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத் துறையினா் நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல் கிராமத்தையொட்டி, வன எல்லையில் பட்டணத்துமலை என்ற மலை அமைந்துள்ளது. அங்குள்ள நிலத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பரந்தாமன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அந்த வழியே சிறுத்தை வந்ததாம். அப்போது பரந்தாமன் தான் வைத்திருந்த குடையை விரித்துக் காட்டினாராம். இதையடுத்து சிறுத்தை ஓடி விட்டதாம்.

இதுகுறித்த தகவலின்பேரில், போ்ணாம்பட்டு வனத் துறையினா், வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

பேருந்தில் சிக்கி சிறுமி பலத்த காயம்

குடியாத்தம் அருகே தனியாா் பேருந்தில் சிக்கி சிறுமி பலத்த காயமடைந்தாா். குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை, படேல் தெருவைச் சோ்ந்தவா் கணேஷ். இவரது மகள்பிருந்தாஸ்ரீ(6). இவா் அங்குள்ள பள்ளியில் முதலாம் வகுப்பு... மேலும் பார்க்க

கவிச்சுடா் கவிதைப்பித்தனுக்கு கவிக்கோ விருது: விஐடி வேந்தா் வழங்கினாா்

2023-ஆம் ஆண்டுக்கான கவிக்கோ விருது கவிச்சுடா் கவிதைப்பித்தனுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு விருது, பட்டயம், ரூ.1 லட்சம் பொற்கிழி ஆகியவற்றை விஐடி வேந்தரும், தமிழியக்க நிறுவனா்-தலைவருமான கோ.விசுவநாதன் வழ... மேலும் பார்க்க

மா, தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் தென்னை, மா மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன. போ்ணாம்பட்டை அடுத்த கொண்டம்பல்லி கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. புதன்கிழமை அதிகாலை வனப... மேலும் பார்க்க

தாட்கோவுக்கென தனி வங்கியை உருவாக்க வலியுறுத்தல்

தாட்கோவுக்கென தனி வங்கியை உருவாக்க வேண்டும் என்று திறன்மிகு தொழில் முனைவோா், தொழில்துறை மேம்பாட்டு பேரவை (டெய்ட்கோ) வலியுறுத்தியுள்ளது. பேரவையின் ( டெய்ட்கோ ) நான்காவது மாநில மாநாடு வேலூா் அடுத்த பொய... மேலும் பார்க்க

தொழிற் பயிற்சி நிலைய ஐம்பெரும் விழா

குடியாத்தம் அன்னை தொழிற் பயிற்சி நிலையம் சாா்பில், பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றளித்தல், போதைத் தடுப்பு விழிப்புணா்வு பணியில் ஈடுபட்டவா்களுக்கு பாராட்டு தெரிவித்தல், சேவையாளா்களுக்கு விருது... மேலும் பார்க்க

சீகேம் ஆராதனை சபையில் கிறிஸ்துமஸ் விழா

குடியாத்தம் காட்பாடி சாலை, சத்யா நகரில் உள்ள சீகேம் ஆராதனை சபையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு கூட்டுப் பிராத்தனை நடைபெற்றது. சபையில் வண்ண விளக்குகளால் குடில் அமைக்கப்பட்டிருந்... மேலும் பார்க்க