செய்திகள் :

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின்!

post image

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைந்த முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தூத்துக்குடியில் ரூ 32. 5 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 4:50 மணிக்கு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் கள ஆய்வு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.

தொடர்ந்து, அடுத்த நாள் திங்கள்கிழமை புதுமைப்பெண் விரிவாக்கத் திட்ட தொடக்க விழா காமராஜ் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தார்.

இதையும் படிக்க: தைலாபுரத்தில் சமாதான பேச்சு! ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு

அவருக்கு, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெ. கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி. ராஜா, மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் க. இளம் பகவத் மற்றும் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர், விமான நிலையத்திலிருந்து நின்று கொண்டிருந்த கட்சி தொண்டர்களிடம் நடந்து சென்று சால்வை மற்றும் பூங்கொத்தை வாங்கி சென்றார். அவர்களுடன் சுயபடம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் அவர், விமான நிலையத்திலிருந்து கார் மூலம் தூத்துக்குடி மறவன்மடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஓய்வெடுப்பதற்காக சென்றார்.

10,701 பேருக்கு வேலை... டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு!

2024ம் ஆண்டில் 10,701 தேர்வர்கள் தெரிவு மற்றும் 14,353 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி(TNPSC) தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள... மேலும் பார்க்க

புத்தாண்டு: ஆளுநர், துணை முதல்வர் வாழ்த்து!

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”புத்தாண்டை ம... மேலும் பார்க்க

புத்தாண்டு: மெரீனா கடற்கரை மூடல், இசிஆரில் போக்குவரத்து நெரிசல்

புத்தாண்டையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சென்னை மெரீனா கடற்கரை மூடப்பட்டுள்ளது.புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வாகனங்களில் மக்கள் ஈசிஆரை நோக்கி படையெடுத்து வருவதால் சென்னை கிழக்குக் கடற்கரை சாலை அக்... மேலும் பார்க்க

சென்னையில் மலர்க் கண்காட்சி: முதல்வர் திறந்து வைக்கிறார்!

சென்னையில் 4வது ஆண்டாக நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள்(ஜன. 2) தொடக்கி வைக்கிறார்.நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த மலா்க்... மேலும் பார்க்க

புத்தாண்டு: புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை(ஜன. 31) புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஆங்கில புத்தாண்டு தினத்தை முன... மேலும் பார்க்க

தொழில்வரி 35% உயர்வு: இபிஎஸ் கண்டனம்

சென்னை மாநகராட்சி சென்னை மக்களுக்கு 35 சதவீத தொழில் வரி உயர்வை அறிவித்துள்ளதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எடப்பாடி கே. பழனிசாமி சமூக வலைதளத்தி... மேலும் பார்க்க