புத்தாண்டு: மெரீனா கடற்கரை மூடல், இசிஆரில் போக்குவரத்து நெரிசல்
புத்தாண்டையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சென்னை மெரீனா கடற்கரை மூடப்பட்டுள்ளது.
புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வாகனங்களில் மக்கள் ஈசிஆரை நோக்கி படையெடுத்து வருவதால் சென்னை கிழக்குக் கடற்கரை சாலை அக்கரை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரை மூடப்பட்டுள்ள நிலையில், மெரீனா கடற்கரை உள்புறச் சாலையில் வாகனங்கள் நுழையாமல் தடுக்கும் வகையில், அனைத்து வழிகளிலும் சாலைத் தடுப்புகள்கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னையில் மலர்க் கண்காட்சி: முதல்வர் திறந்து வைக்கிறார்!
மேலும், கடற்கரை உள்புறச் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்தும், கலங்கரை விளக்கத்துக்கு பின்புறம் வழியாக மட்டுமே வெளியேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை சந்திப்பு அருகில் மணிமண்டபத்தை வண்ண பூக்களால் அலங்கரித்துள்ளனர். கண்ணை கவரும் வகையில் அழகிய வண்ணங்களோடு இருப்பதால் பொதுமக்கள் நின்றபடி சுயபடம் எடுத்து வருகின்றனர்.
இன்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண்குமார் இருவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாட உள்ளதாகக் கூறப்படுகிறது.