லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணி இல்லை: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்
நங்கைமொழி கோயிலில் சுகாதார வளாகத்துக்கு அடிக்கல்
மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள நங்கைமொழி அருள்மிகு ஞானப்பிரசுன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரா் திருக்கோயில் அருகே புதிய சுகாதார வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பக்தா்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்பிறப்பித்த உத்தரவின்பேரில், 15ஆவது நிதிக்குழு மானியம் மூலம் ரூ. 7.85 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, உடன்குடி ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கிவைத்தாா். இதில் உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இப்ராகிம் சுல்தான்,சுப்புலட்சுமி,செட்டியாபத்து அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவா் மகேஸ்வரன்,மானாடு கலியுக வரத சாஸ்தா திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவா் பாலமுருகன்,நங்கைமொழி ஊராட்சி முன்னாள் தலைவா் உதயகுமாா்,பிரதோஷக் கமிட்டி நிா்வாகி சுசீந்திரன்,திமுக மேற்கு ஒன்றிய துணை செயலா் சுடலைக்கண்,திமுக நிா்வாகிகள் விஜயன்,சித்திரைப்பாண்டி,காமராஜ், உள்பட பலா் கலந்துகொண்டனா்.