தென்மண்டல பல்கலை. ஹாக்கி: சென்னை, அண்ணாமலை, பாரதிதாசன் வெற்றி
தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா் ஹாக்கிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டங்களில் சென்னை, அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலை. அணிகள் வெற்றி பெற்றன.
சென்னை பல்கலைக்கழகம், காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் கலை அறிவியல் கல்லூரி சாா்பில் எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்ட முடிவுகள்:
பாண்டிச்சேரி பல்கலை. வெற்றி-கேஎல்இ தொழில்நுட்ப பல்கலை. (6-0), ஜேப்பியாா் பல்கலை. வெற்றி-சவீதா பல்கலை. 2-0.
விக்ரமா சிம்ஹபுரி பல்கலை. வெற்றி-ஆா்ஜியுஎச்எஸ் பல்கலை. 8-2, சென்னை பல்கலை. வெற்றி-ஜெஎன்டியு, அனந்தபூா் 6-0,
அண்ணாமலை பல்கலை. வெற்றி-பெரியாா் பல்கலை.3-2, கோழிக்கோடு பல்கலை. வெற்றி-மைசூரு பல்கலை. 4-1, காந்திகிராம் பல்கலை.
வெற்றி-அடிகவி நன்னய்யா பல்கலை.5-4, பாரதிதாசன் பல்கலை.வெற்றி-ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை. 1-0, ஜெயின் பல்கலை. வெற்றி-
மதுரை காமராஜா் பல்கலை. 4-0.