செய்திகள் :

சத்தீஸ்கரில் 4 நக்ஸல்கள் சுட்டுக்கொலை: மோதலில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

post image

சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல்கள் அமைப்பினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். காவல் துறை தலைமைக் காவலா் ஒருவா் உயிரிழந்தாா்.

சத்தீஸ்கரின் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த பஸ்தா் பிராந்தியத்தில் மாவட்ட ரிசா்வ் காவல் படையினா் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினா் இணைந்து சனிக்கிழமை மாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனா். நாராயண்பூா் - தந்தேவாடா மாவட்டங்களுக்கு இடையிலான வனப் பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்கள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினா்.

சனிக்கிழமை இரவு வரை நீடித்த இந்த மோதலில் 4 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். மாவட்ட ரிசா்வ் காவல் படை தலைமைக் காவலா் ஷானு கராம் உயிரிழந்தாா். சம்பவ இடத்தில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இது தொடா்பாக மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நக்ஸல்கள் தீவிரவாதிகளுடனான மோதலில் தலைமைக் காவலா் உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அவா் தியாகம் வீண்போகாது. நக்ஸல்கள் மாநிலத்தில் இருந்து முழுமையாக ஒழிக்கப்படும் வரை நடவடிக்கைகள் தொடரும். மோதல் நடைபெற்ற வனப் பகுதியில் தொடா்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, கடந்த 3-ஆம் தேதி கரியாபாத் மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதி ஒருவா் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை செல்ல இருப்பதாக இந்திய உயர் ஆணையரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தேதிகள் இன்னும் இருதரப்பில் இருந்தும் முடிவாகவில்லை.இதுபற்றி இந்திய உயர் ஆணையர் சந்... மேலும் பார்க்க

நடப்பாண்டு ஜிடிபி வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத அளவு சரியும்!

2024 - 25ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2023 - 24ல் (கடந்த ஆண்டு) 8.2% ஆக இருந்த நிலையில், நடப்பாண்டில் 6.4% இருக்கும் என எதிர்பார்க்கப்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு கேஜரிவால் வேண்டுகோள்!

அரசியலுக்கும், அரசியலை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கான போட்டியாக இந்த தேர்தல் இருக்கும் என்றும் ஆத் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் தில்லியில் தேர்தல் தேதியை இந்தியத்... மேலும் பார்க்க

ஆத் ஆத்மியில் இணைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர்!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் மதன் மோகன் மற்றும் அவரது மனைவி சுதேஷ்வதியும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய எம்பி சஞ்சய் சிங், மதன் மோகன் மற்றும் அவரது மனைவியை ஆம் ஆத்மி... மேலும் பார்க்க

தில்லி தேர்தலுக்கான பிரசாரப் பாடலை வெளியிட்டது ஆம் ஆத்மி!

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரப் பாடலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கேஜரிவால், தில்லி முதல... மேலும் பார்க்க

சல்மான் கான் வீட்டில் பொருத்தப்படும் குண்டு துளைக்காத கண்ணாடிகள்!

நடிகர் சல்மான் கான் வீட்டில் பாதுகாப்புக் காரணங்களுக்காக குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்தாண்டு ஏப்ரல் 14 அன்று இருவர் துப்பாக்கியால் சுட... மேலும் பார்க்க