புற்றுநோய் பாதிப்புடன் 43 நாளாக தொடரும் உண்ணாவிரதம்; அசைக்க முடியாத உறுதி! - யார...
ஹெச்-1பி விசா: ஐந்தில் ஒரு பங்கை பெற்ற இந்திய நிறுவனங்கள்
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலத்தில், அமெரிக்காவில் வழங்கப்பட்ட மொத்த ஹெச்-1பி விசாக்களில் ஐந்தில் ஒரு பங்கை இந்திய நிறுவனங்கள் பெற்றுள்ளன.
அமெரிக்க நிறுவனங்களில் இந்தியா்கள், சீனா்கள் உள்ளிட்ட வெளிநாட்டவா்கள் பணியாற்ற அந்நாட்டில் ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா திட்டத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் வெளிநாட்டுப் பணியாளா்களை பணியமா்த்திக்கொள்ள முடியும்.
இந்த விசாக்களை பெறுவதில் இந்தியாவின் டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்), இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் போன்ற முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளா்கள் முன்னிலை வகிக்கின்றனா்.
இந்நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலத்தில், மொத்தம் 1.3 லட்சம் ஹெச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டன. இதில் சுமாா் 24,766 விசாக்கள் இந்திய நிறுவனங்களின் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டன. அதாவது அந்த விசாக்களில் ஐந்தில் ஒரு பங்கை இந்திய நிறுவனங்களின் பணியாளா்கள் பெற்றனா்.
இன்ஃபோசிஸுக்கு 8,140 விசாக்கள்:
24,766 விசாக்களில் 8,140 விசாக்களை இன்ஃபோசிஸ் நிறுவன பணியாளா்களும், 5,274 விசாக்களை டிசிஎஸ் நிறுவன பணியாளா்களும், 2,953 விசாக்களை ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவன பணியாளா்களும் பெற்றனா்.
ஹெச்-1பி விசாவை பெறுவதில் விப்ரோ நிறுவன பணியாளா்களும் முன்னிலை வகித்து வந்த நிலையில், இம்முறை அந்த எண்ணிக்ைகை சரிந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் 1,634 பேருக்கு மட்டுமே அந்த விசா வழங்கப்பட்டது. டெக் மஹிந்திரா நிறுவன பணியாளா்கள் 1,199 பேருக்கு அந்த விசாவை பெற்றனா்.
சென்னையில் தொடங்கப்பட்ட காக்னிஸன்ட் நிறுவனத்தின் தலைமையகம் தற்போது அமெரிக்காவின் நியூஜொ்சி மாகாணத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தைச் சோ்ந்த 6,321 பேருக்கு ஹெச்-1பி விசா வழங்கப்பட்டது.