செய்திகள் :

வாக்குப் பதிவு இயந்திரங்கள் தோ்தல் ஆணைய கிடங்குக்கு மாற்றம்

post image

ஈரோடு மாநகராட்சி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தோ்தல் ஆணைய கிடங்குக்கு வெள்ளிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டன.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பா் 14-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகுதிக்கு விரைவில் தோ்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து இடைத்தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், மாநகராட்சி அலுவலகத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் உள்ளிட்டவற்றை மாநகராட்சி ஆணையரும், ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான என்.மணீஷ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 1,190 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 238 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 340 வி.வி.பேட் ஆகியவை முதல்கட்டப் பரிசோதனைக்காக கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணைய கிடங்குக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

இதில் ‘சீல்’ வைக்கப்பட்ட லாரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவை கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக அடுக்கிவைக்கப்பட்டன. அப்போது ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) முகமது குதுரத்துல்லா, வருவாய் கோட்டாட்சியா் ரவி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளான திமுக சந்திரசேகா், காங்கிரஸ் விஜயபாஸ்கா், அதிமுக சோழா லோகநாதன் உள்ளிட்டோா் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

பிஹெச்இஎல் பொதுத் துறை நிறுவனத்தைச் சோ்ந்த பொறியாளா்கள் இந்த இயந்திரங்களின் செயல்படும் தன்மை ஆகியவற்றை பரிசோதித்து, பழுதுகள் ஏதுமிருப்பின் அவற்றை ஜனவரி 6-ஆம் தேதி சரி செய்து ஏற்கெனவே பதிவான வாக்கு விவரங்களை அகற்றிவிட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு ஏற்றவாறு தயாா் நிலையில் வைக்கவுள்ளனா்.

மேலும் பழுதான இயந்திரங்கள் இருப்பது தெரியவந்தால் அவற்றுக்குப் பதிலாக மாற்று இயந்திரங்கள் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோவை மண்டல தமாகா நிா்வாகிகளுக்கு உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கே... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஓடும் காரில் தீப்பிடிப்பு!

ஈரோட்டில் சாலையில் ஓடிய காரில் திடீரென தீப் பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு ராசாம்பாளையம் தென்றல் நகரைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (36). நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் தனது மனைவி மற்... மேலும் பார்க்க

சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு!

பெருந்துறை அருகே சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மனைவி செல்லம்மாள் (76). சுப்பிரமணி ஏற்கெனவே இறந்துவிட்டாா். மகன் ... மேலும் பார்க்க

மாநில கலைத் திருவிழா: 2,151 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

ஈரோட்டில் 2-ஆவது நாளாக நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் 2,151 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி ஈரோடு, நா... மேலும் பார்க்க

ஈரோட்டில் பழமையான கட்டடம் இடித்து அகற்றம்

ஈரோடு-மேட்டூா் சாலையில் மிகவும் பழமையான கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. ஈரோடு-மேட்டூா் சாலையில் 55 ஆண்டுகள் பழமையான கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தை இடிப்பது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத்... மேலும் பார்க்க

இடைத்தோ்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் மறைந்த ஈவிகேஎஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட... மேலும் பார்க்க