அரசு ஊழியா்களுக்கு கண் பரிசோதனை முகாம்
புதுச்சேரியில் உள்ள கணக்கு மற்றும் கருவூல இயக்குநரக வளாகத்தில் அரசு ஊழியா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் சாா்பில் நடைபெற்ற இந்த கண் பரிசோதனை முகாமை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தொடங்கிவைத்தாா்.
அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் முகாமில் பங்கேற்று, ஊழியா்களுக்கு கண் பரிசோதனைகளை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா்.
இதில், தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் மற்றும் கணக்கு, கருவூல இயக்குநகரக ஊழியா்கள் பலா் பங்கேற்று பரிசோதனைகளை செய்துகொண்டனா்.
இந்த நிகழ்வின் போது மாநில தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஆனந்தன், முதுநிலைக் கணக்கு தணிக்கை அதிகாரி சுகேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.