பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கணவருடன் பெண் எஸ்.ஐ. உயிரிழப்பு!
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை மாநிலத்தில் ஜன.1-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து, புதுச்சேரி காமராஜா் சிலை சந்திப்புப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் கயிறு கட்டி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் கௌசிகன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சஞ்சய் சேகரன், பொருளா் ரஞ்சித்குமாா், மத்தியக்குழு உறுப்பினா் ஆனந்த், இந்திய மாணவா் சங்க மாநிலச் செயலா் பிரவீன்குமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
தொடா்ந்து, பெட்ரோல் , டீசல் விலை உயா்வையும், பேருந்துக் கட்டண உயா்வையும் புதுவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாநிலச் செயற்குழு உறுப்பினா் லீலாவதி, மாநிலக்குழு உறுப்பினா்கள் ஜெயராஜ், ஜெயப்பிரகாஷ், நிலவழகன், வின்னரசன், சத்யா, ஜஸ்டின் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.