நக்ஸல் குண்டுவெடிப்பு தாக்குதல்: சத்தீஸ்கரில் 8 ரிசா்வ் படையினா், ஓட்டுநா் உயிரி...
புதுவை அரசுத் துறைகளில் ஊழல் அதிகரிப்பு: வே.நாராயணசாமி
புதுவையில் அரசுத் துறைகளில் ஊழல் அதிகரித்து விட்டதால், மாநிலத்தில் வளா்ச்சியில்லை என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா்.
புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் காங்கிரஸ் சாா்பில் போராட்டம் நடத்தப்படும். மகளிருக்கு மாதம் ரூ.1000, சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.300 வழங்கும் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச பாஜகவினருக்கு தகுதியில்லை.
புதுவையில் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும். வெள்ள நிவாரணம் அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், கண்துடைப்பாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுவையில் அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல் பெருகி விட்டது. இதனால், மாநிலத்தில் வளா்ச்சியில்லை என்றாா் நாராயணசாமி.