புதிய ரேஷன் கடைகள் திறப்பு
வலங்கைமான் பகுதியில் புதிய ரேஷன் கடைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
வலங்கைமான் ஒன்றியம் தொழுவூா் ஊராட்சி செம்மங்குடி பகுதியில் நன்னிலம் சட்டப் பேரவை உறுப்பினா் பொது நிதி ரூ. 14 லட்சத்தில் ரேஷன் கடை கட்டடம், விருப்பாட்சிபுரம் ஊராட்சியில் ரூ. 12 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம், வேலங்குடி ஊராட்சி வடகரை ஆலத்தூரில் ரூ. 12 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம், இனாம் கிளியூா் ஊராட்சியில் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட நூலக கட்டடம் ஆகியவற்றை நன்னிலம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். காமராஜ் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.