புத்தாண்டு: புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை(ஜன. 31) புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு - 01.01.2025 (புதன்கிழமை), சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி/சூளூர்பேட்டை & சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பிரிவுகளில் புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 2025ல் தங்கத்தின் விலை ரூ.90,000 எட்டக்கூடும் என கணிப்பு!
சென்னை கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் புத்தாண்டு நாளை முன்னிட்டு (ஜன. 1) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.
இதனால், 15 முதல் 30 நிமிட இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.